சிறை கைதி மூச்சு திணறி சாவு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு செம்மை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமையன்(வயது 55). இவர் 2018ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமையன் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.