திருச்சியில் இந்தாண்டு 10,072 நபர்கள் மீது வழக்கு பதிவு – மாநகர காவல் ஆணையர்

0 283
Stalin trichy visit

திருச்சி மாநகரில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்து இந்த ஆண்டு 10,072 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 114 சதவீதம் அதிகமாகும்.

 

கத்தியை காட்டி வழிப்பறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள்,போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள்,போக்சோ மற்றும் பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்கள்,கறுப்பு சந்தையில் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 85 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 112% அதிகமாகும்.

 

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால கனவை பாழாக்கும் பொருட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 283 நபர்கள் மீது 202 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 106% சதவீதம் அதிகமாகும்.

 

பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 7270 நபர்கள் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 74 சதவீதம் அதிகமாகும்.

 

ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் எதிரொலியால் நடப்பாண்டில் கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.