கொரோனாவால் வாட்டி எடுத்த வறுமை – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து கணவர் சாவு – மனைவி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!

0 428
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் சண்முகா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ( 40). இவர் சென்னையில் உள்ள ஹார்டுவேர்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த 1½ ஆண்டுகளாக வேலை இல்லாமல் துறையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்தார்.

 

இவரது மாலா (34) என்ற மனைவியும், சஞ்சனா(9), சகானா(4) என 2 மகள்களும் உள்ளனர். துறையூரிலும் சரியான வேலை எதுவும் அமையாததால் குடும்பத்தை நடத்த முடியாமல் சுப்பிரமணி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். குடும்பம் வருமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுப்பிரமணி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதனை மனைவியிடம் தெரிவித்துள்ளநிலையில் அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுக்கும் காலை உணவில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் அந்த உணவை சாப்பிட்டார். இதனை சாப்பிட்ட 4 பேரும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தவாறு வீட்டில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். மாலாவும், 2 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட வறுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு குடும்பமே தற்கொலை முடிவு எடுத்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.