மக்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன்… வேட்பாளர் என்.ஜவஹர்லால்நேரு உருக்கம்!
திருச்சி மாநகராட்சி 20வது வார்டு அதிமுக வேட்பாளர் என்.ஜவஹர்லால்நேரு மணிமண்டபசாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தி.மு.க.வினர் பெய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் மக்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக சென்ற இடம் எல்லாம் வேட்பாளர் என்.ஜவஹர்லால்நேருவுக்கு சால்வை, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வெற்றி பெற வாழ்த்தினர்.