வெற்றி முழக்கத்துடன் ம.ம.க. வேட்பாளர் மரியம்பீவி தீவிர வாக்கு சேகரிப்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தேர்தலில் 21வது வார்டு மனிதநேயம் மக்கள் கட்சி (தி.மு.க. கூட்டணி) வேட்பாளர் ச.மரியம் பீவி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரச்சாரத்தின்போது, பாராளுமன்றத்திலும் நாமே, சட்டமன்றத்திலும் நாமே, நகர்புறத்திலும் நாமே என்ற வெற்றி முழக்கத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் ம.ம.க. நகர தலைவர் அக்பர் பாட்ஷா, திமுக வட்ட செயலாளர் வெற்றிசெல்வன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.