தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ராஜாஜிநகரை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 24). இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் திருச்சி வயலூர்ரோடு பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.