திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சியை அடுத்த உப்புலியபட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது28). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை துவரங்குறிச்சி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில் மணப்பாறை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் தின்னரை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து காயங்களுடன் இருந்த அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது ,பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.