திமுக வேட்பாளருக்கு எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு:
திருச்சி மாவட்டம்,மணப்பாறை நகராட்சி 25-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ்-யை ஆதாரித்து சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பபில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜீவ்நகர், பாத்திமாமலை ஆகிய பகுதிகளை கொண்ட 25 வார்டில் திமுக சார்பில் கீதா ஆ.மைக்கெல்ராஜ் களமிருக்கப்பட்டுள்ளார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தனது வார்டு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, கீதா ஆ.மைக்கேல்ராஜை ஆதரித்து திறந்த ஜீப்பில் ராஜீவ்நகர்,பாத்திமாமலை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர்.நமது நகராட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்,பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் மக்களை வந்தடையும் என எம்.எல்.ஏ பரப்புரை மேற்கொண்டார்.
திமுக சார்பில் இளைஞரணி, விவசாய அணி,மாணவரணி நிர்வாகிகளும் கீதா ஆ.மைக்கேல்ராஜை ஆதரித்து வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் கூறுகையில், நான் வெற்றி பெற்றால்.25-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்நகர் கிழக்கு, பாத்திமாமலை,எஸ்.எஸ்.நகர் ஆகிய பின் தங்கிய பகுதிகளில் 2006-ஆம் ஆண்டு 82 குடும்பங்களுக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தான் பட்டா வழங்கினார்.தற்போது 120 பேர் பட்டா கேட்டு மனு அளித்துள்ளர். அவர்களுக்கு தேர்தல் முடிந்து 30 நாட்களில் அமைச்சர்,எம்.எல்.ஏ வாயிலாக வீட்டுமனை பட்டா வழங்க ஆவண செய்யப்படும், அதேபோல்,கடந்த மழை காலத்தில் நகர் பகுதியினை சேதப்படுத்திய அப்பு அயர் குளம் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். கழிவு வாய்க்கால்கள் அமைக்கவும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்படும் என வாக்குறுதியளிப்பதாக கூறினார்.