கள்ளச்சந்தையில் மதுவிற்ற முன்னாள் பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

0 838
Stalin trichy visit

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் மேக்குடி பகுதி அரசு மதுபானக்கடை பாரில் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய்க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மீராபாய் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பாலக்கரை பகுதியை சேர்ந்த முன்னாள் பார் உரிமையாளர் பாக்கியராஜ்(வயது 37) மூலமாக அவர் கடையில் வேலை பார்த்த நாகமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55), மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்(வயது 45) ஆகிய மூன்று பேர் கள்ள சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற போது கையும் களவுமாக அவர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 680 மதிப்புள்ள 864 குவார்ட்டர் மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து ஜெ.எம் 4-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அரசு மதுபான பாட்டில்களை கள்ளச்சந்தை விற்பதற்கு மூலகாரணமான மேக்குடி அரசு மதுபான கடை சூப்பர்வைசரான திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த பட்டன் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.