25ம் தேதி காவல் வாகனங்கள் ஏலம்; நாளை பார்வையிடலாம்…!

0 901
Stalin trichy visit

திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணியில் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்ட உடைக்கும் நிலையில் உள்ள காவல் வாகனங்கள் கமாண்டன்ட் உத்தரவுப்படி பொது ஏலம் விடப்படஉள்ளது. முன்னதாக வரும் 20ம் தேதி (நாளை) சிறப்பு காவல் படை வளாகத்தில் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

ஏலம் நடைபெறும் நாளான வரும் 25ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.5 ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9498108378. என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.