தேர்தல் விதிமுறையை மீறிய பாஜகவினர் 200 பேர் மீது வழக்கு!

0 298
Stalin trichy visit

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்புக்கு நேற்றுமுன்தினம் கடைசி நாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்த கட்சியினர் மாநகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாலக்கரை ரவுண்டானாவில் பாஜகவினர் பட்டாசு வெடித்து வாக்கு சேகரித்தனர். இதையடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்பட 200 பேர் மீது காந்தி மார்க்கெட் சப் இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.