திருச்சியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

0 375
Stalin trichy visit

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வக்கீல்கள் பலர் தாக்கப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டுதோறும் இந்த தினத்தை கருப்பு தினமாக வக்கீல்கள் அனுசரித்து வருகிறார்கள்.

மேலும், இந்தநாளில் கோர்ட்டு புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பிப்ரவரி 19 -ந் தேதியான இன்று(சனிக்கிழமை) கோர்ட்டு விடுமுறை என்பதால் முந்தைய நாளான நேற்று கருப்பு தினமாக அனுசரித்து திருச்சியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.