முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

0 336
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோத நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட வனப் பகுதிகளில்  ரோந்து சென்றபோது, அங்கு 3 பேர் முயல் வேட்டையாட முயன்றனர்.

இதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், திருச்சி பெரிய கட்டுகுளத்தை சேர்ந்த சிவராஜ்(வயது 20), அரவிந்த் (வயது20), கலவைபட்டியை சேர்ந்த ராஜசேகர்(வயது19) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஹெட் டார்ச்லைட், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடுதல் சட்டப்படி குற்றமாகும். ஆகவே பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.