சுற்றுச் சூழல் வளம் மீட்பு மேலாண்மை மையம் தொடக்கம்….!

0 327
Stalin trichy visit

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில் சுற்றுச் சூழல் வளம் மீட்பு மேலாண்மை மையம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி ஆட்சிமன்றக்குழு தலைவர் சந்திரசேகரன் சுற்று சூழல் வளம் மீட்பு மேலாண்மை மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், கல்வி மட்டுமின்றி சுற்றுப்புறத்திற்கும் முக்கியம் தந்து மாணவர்கள் செயலாற்ற வேண்டும் என்றார்.

வள மீட்பு மையத்தின் மற்ற பிரிவுகளை தஞ்சாவூர் திருமண்டல குருத்துவ செயலாளர் சுதர்சன், மண்டல பொருளாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் பால்தயாபரன் வரவேற்றார். சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் அழகப்பா மோசஸ் முன்னிலை வகித்தார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.