திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் வந்த விமானத்தில் அதி காரிகள் சோதனை நடத்தினர். பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் தூய்மைப்படுத்தும் மற்றும் சோதனை செய்யும் பணி நடந்தது.
அப்போது விமானத்தின் இருக்கையின் பக்கவாட்டு பகுதியில் நீளமான பிளாஸ்டிக் கவ ரில் ஜெல்போல் மறைத்து வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனைபார்த்தபோது அதில் தங்கம் இருப்பது தெரிய வந்தது. அந்த கடத்தல் தங்கத்தை வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெல்லை தவிர்த்து பார்த்ததில் 421 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.21.50 லட்சமாகும். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து இங்குவைத்து விட்டு சென்றது யார்? என அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.