திருச்சி வாத்தலை மேலணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

0 506
Stalin trichy visit

திருச்சி வாத்தலை முக்கொம்பு மேலணையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது – மாவட்ட ஆட்சியர் சிவராசு புள்ளம்பாடி வாய்காலின் மதகை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயின் மதகுகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது,இதன் மூலம் சேலம்,நாமக்கல் ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல் திருச்சி வாத்தலை முக்கொம்பு மேலணையில் இருந்து பிரியும் புள்ளம்பாடி வாய்க்காலை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திறந்துவைத்தார்.
முக்கொம்பில் இருந்து புள்ளம்பாடி வரை செல்லும் இந்த வாய்க்கால் மூலம் 1000க்கனக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.