தங்கநகை திருடிய பெண் கைது!

0 302
Stalin trichy visit

திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில் திருச்சி பெரியமிளகுபாறையைச் சேர்ந்த யோகநாதன் மனைவி எழிலரசி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று லோகநாதன் 3 பவுன் செயினை வீட்டில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

திரும்பி வந்து பார்த்தபோது செயின் மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், செயினை திருடியது எழிலரசி(வயது 30) என்பது தெரியவந்தது. நகையை மீட்ட போலீசார் எழிலரசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.