வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கில் கலெக்டர் மாதாந்திர தணிக்கை!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கினை திருச்சி மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சு.சிவராசு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவினைத் தொடர்ந்து, மாதாந்திர தணிக்கை செய்தார். அப்போது தேர்தல் தனி வட்டாட்சியர் கே.முத்துச்சாமி உடனிருந்தார்.