ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் தம்பதி மீது வழக்கு!

0 253
Stalin trichy visit

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு ஆளுந்தூர் கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை ரூ.51 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாங்க நிர்ணயம் செய்து ரூ.10 லட்சத்தை முன் தொகையாக நில உரிமையாளரிடம் கொடுத்தார்.

பின்னர் பல தவணைகளில் மீதி தொகையை கொடுத்து அந்த நிலத்தை தனது விருப்பத்தின்பேரில், மற்றொரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்தார். ஆனால் 2012-ம் ஆண்டு நிலம் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவியில் இருந்த நபர் விலகி விட்டதால், புதிய நிர்வாக இயக்குனரை வரதராஜன் நியமித்துள்ளார்.

அதன்பிறகு ஆளுந்தூரில் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 9 ஏக்கர் நிலத்தில் சில பகுதிகளை மட்டும் விற்பனை செய்துள்ளனர். விற்பனை செய்த தொகை ரூ.90 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை மட்டும் நிறுவனத்தில் கணக்கு காண்பித்துவிட்டு மீதமுள்ள ரூ.70 லட்சத்தை கணக்கில் தாக்கல் செய்யாமல் மோசடி செய்து விட்டதாக வரதராஜன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.