திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி முத்தரையர் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா(வயது 26). மளிகைக்கடை நடத்தி வருகிறார். திருமணமான இவர், வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மன உளைச்சலில் இருந்த இளையராஜா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்டை சாப்பிட்டதாக தெரிகிறது.
ஆபத்தான நிலையிலிருந்த இளையராஜாவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.