அ.தி.மு.க.வே பா.ஜ.க.வை கலட்டிவிடும் அளவிற்கு அவநம்பிக்கை; விசிக தலைவர் திருமாவளவன் தாக்கு!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 9 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை தங்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் பரிசீலினை செய்வார் என நம்புகிறோம். கடலூரில் மேயர், திருச்சியில் துணை மேயர் பதவி கேட்டு இருக்கிறோம்.
பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது என்கிற ஓபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
தங்களது தோல்வி இப்படித்தான் ஓபிஎஸ் நியாயப்படுத்த முடியும்.
தமிழகத்தில் பாஜக நகர்ப்புற தேர்தலில் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் திமுக வாக்கு பெற்ற சதவீதத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்றார். பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது சொல்ல வேண்டுமென்றால்
பூஜியம் என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்றாவது இடம் பெற்றிருக்கிறோம் என்று அவர்கள்தான் கூறுகிறார்கள். புள்ளி 5 சதவீதம் தான் சட்டமன்ற தேர்தலை விட தற்போது அவருடைய பார்த்து சதவீதம் கூடுதல் என குறிப்பிட்டார். சில இடங்களில் அதிமுக விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம் என பாரதிய ஜனதா கட்சி கூறுவது அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல், கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து இருக்கும். மீண்டும் பாஜகவை தோலில் சுமந்தால் அதிமுக அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பதால் தான் அதிமுக பா.ஜ.கவை கலட்டி விட்டது. அதிமுகவே பாஜகவை கலட்டி விடும் அளவிற்கு மக்களிடம் அவ நம்பிக்கையை பெற்று உள்ளது பாஜக.
மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அஞ்சலி கூட்டம் ஒரு அரங்கில் நடைபெறுகிறது. அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டார். ஆட்சி பொறுப்பேற்ற இந்த நிர்வாகம் 8 மாதத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் தலைசிறந்த முதல்வர் என்கிற பாராட்டுதலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். இந்த நன்மதிப்பு தேர்தல் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணி போல் சிதறவிடாமல் திமுக கூட்டணி கட்டுக்கோப்புடன் இந்த தேர்தலை சந்தித்து உள்ளது. 55 விழுக்காடு என்கிற அளவில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். போட்டியிட 27 இடங்களில் 18 இடங்களில் வி.சி.க வெற்றி பெற்றுள்ளது என்றார்.