லால்குடியில் 13ம் தேதி ஜல்லிக்கட்டு; முகூர்த்தக்கால் நடும் பணியுடன் தொடங்கியது

0 297
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி கிராமத்தில் குறுந்தாளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த ஆண்டு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனைப்படி, மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில்

லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் அரசு விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 13ம் தேதி நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. முன்னதாக குறுந்தாளம்மன் கோவில் குருக்கள் விசுவநாதன் சிறப்பு பூஜைகள் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.