மார்ச் இறுதிக்குள் பாடங்கள் முடிக்கப்பட்டு ஏப்ரலில் தேர்வு; அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

0 359
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள காசோலைகல், பள்ளிகளுக்கு

தேவையான கணினிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி,
மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும். கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச்

மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சமது என் கோவிந்தராஜன், திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா தனுஷ், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.மதிவாணன், மாநகர் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.