ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சாலை விபத்தில் பலி!

0 356
Stalin trichy visit

திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 74) ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மன்னார்புரம் அருகே சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி சீனிவாசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.