காவல்துறை வாகனங்கள் வருகிற 9ம் தேதி ஏலம்!

0 1,014
Stalin trichy visit

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது. வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக்

கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 9ம் தேதி அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம்) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.