6 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு பிடிபட்டது!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி தனியார் திருமண மண்டபம் அருகில் சின்ன பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் அரிய வகை 6 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு கிடந்தது. அதனைக் கண்ட
பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையில் அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.