கல்லூரிகளுக்கு இடையேயான வலைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!

0 277
Stalin trichy visit

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் வலைப்பந்து விளையாட்டுப்போட்டி திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஜென்னிஸ் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் அரியலூர் எம்.ஆர்.சி. உடற்கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் 2-ம் இடத்தையும், ஜென்னிஸ் உடற்கல்வியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்தது. இதேபோல

பெண்கள் பிரிவில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி முதலிடத்தையும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் 2-ம் இடத்தையும் மற்றும் ஜென்னிஸ் உடற்கல்வியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் வென்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஜென்னிஸ் உடற்கல்வியியல் கல்லூரி துணை தாளாளர் ஆண்டனி சித்தாந்த், டாக்டர் தங்க பிச்சையப்பா, புண்ணியமூர்த்தி, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.