திறப்பு விழா கண்டும் 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம்; கலெக்டரிடம் மனு!

0 474
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்பவர் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 1வது வார்டு கோர்ட் JM-V உள்பட அனைத்து அரசு அலுவலங்கள் நிறைந்த பகுதியான மூலத்தோப்பு மேலூர் ரோட்டில் லெட்சுமி நகர் முதல் கிராஸ் 2016ம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடமானது சிலபல காரணங்களால் திறப்பு விழா ஒத்தி செல்ல நேரிட்டது. பிறகு ஒரு வழியாக கடந்த 2018ம் ஆண்டு காணொலி காட்சி மூலம் அன்றைய முதல்வர் எடப்பாடி K பழனிசாமி,

முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் திறப்பு விழா கண்ட நிலையிலேயே ஐந்து ஆண்டுகளாக பூட்டியுள்ள அதிநவீன, சகல வசதியுடன் கட்டபட்டுள்ள அய்யனார் உயர்நிலைப்பள்ளி வரும் 2022-2023 கல்வியாண்டில் திறக்க வேண்டி ஸ்ரீரங்கம் பகுதிவாழ் மக்கள் சார்பாக பள்ளிக்கல்வித்துறை ஆவணம் செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். வார்டு எண் 1, 2, 3, 4, 7 பகுதி வாழ் மக்களுக்கு பெரிதும் பயன்பெறும் வகையில் இப்பள்ளியை தனியாக இயங்க வேண்டும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. வளர்ந்து வரும் ஸ்ரீரங்கம் நகரத்தில் தற்போது இயங்கிவரும் பள்ளிகளில் அனைத்து அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (மேலூர் உள்பட) அதிகப்படியாக மாணவ- மாணவிகள் சேர்க்கையால்

அங்கு எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இட நெருக்கடியால் அவதியுருவதை கருத்தில் கொண்டும், ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளிகளில் இடம் கிடைக்காமல் மேலூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்லவேண்டி உள்ளது. ஆனால் அதன் சுகாதாரம் இட வசதி அனைத்தும் நிறைவாக இல்லை. பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் 2022-2023 வது, ஐந்து ஆண்டுகளாக பூட்டியுள்ள அதிநவீன, சகல வசதியுடன் கட்டபட்டுள்ள “அய்யனார் உயர்நிலைப்பள்ளி” ஸ்ரீரங்கம் மேலூர் செல்லும் முக்கிய பிரதான சாலையில் மூலத்தோப்பு, லெட்சுமி நகரில் உள்ள பள்ளியை உடன் ஆய்வு செய்து திறக்கப்பட வேண்டும் என பலரது கோரிக்கையாகவே உள்ளது. பலத்துறை சார்ந்த அதிகாரிகாளுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியும் பயன் இல்லை, பள்ளி கட்டி முடிக்கப்படும் கல்விக்கு பயன்படுத்தாமல் அனைத்து அதிகாரிகளும் மாணவர்களுக்கு உதவ முன்வரவில்லை. தற்சமயம் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ சேர்க்கை

விகிதம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டும் வரும் 2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி சேர்க்கை அதிகரிக்கும். எனவே ஸ்ரீரங்கம் மைய பகுதியில் இருக்கும் காரணத்தால் இப்பள்ளி கல்வியாண்டில் திறக்க வழிவகை செய்து பெற்றோர்களின் கல்வி சுமை தீர்த்து வைக்க துறைசார்ந்த அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள், உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்கவும், பள்ளி திறக்கவும் பெற்றோர்கள் விருப்பமாக உள்ளார்கள். அதே சமயத்தில் மேலூர் பள்ளிக்கு செல்ல இங்குவுள்ள ஸ்ரீரங்கம் மாணவ-மாணவிகளுக்கு சரிவர பேருந்து வசதியில்லாமல் பல நேரங்களில் புத்தகப்பை சுமந்து கொண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். மாணவ-மாணவிகள் இது எந்தவகையில்

நியாயம் என்று பலமுறை நடுநிலையாளர்களின் கேள்வியாக அமைகிறது. இந்த பேருந்து பிரச்சனையால் மேலூருக்கு பல பெற்றோர்கள் தனியாக ஆட்டோவிலும், இருசக்கர வாகனத்திலும், மிதிவண்டியிலும் பெற்றோர்கள் அழைத்து செல்கின்றனர். வாடிக்கையான நிகழ்வாக மாறியுள்ளது. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இப்பள்ளியை ஆய்வு செய்து பள்ளியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஸ்ரீரங்கம் வாழ் பொதுமக்களின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 5 ஆண்டாக ஸ்ரீரங்கம் மையப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. திறக்காத பள்ளி திறக்கபட்டால் பலரது கல்வி கனவு, சுமை நீங்க வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.