லஞ்சம் பத்தவில்லை இன்னும் கொடு; ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட எஸ்ஐ!

0 356
Stalin trichy visit

துறையூர் – பெரம்பலூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மணவறை அமைக்கும் பணிக்கு சென்ற திருவானைக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் சரத் (வயது 24) கடந்த 7ம் தேதி குழுவினரோடு சென்றார். அப்போது இரும்புக் குழாயை தூக்கிச் சென்றபோது உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம்

பாய்ந்து உயிரி ழந்தார். இதுகுறித்து துறையூர் எஸ்ஐ சேகர் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வந்தார். இந்நிலையில் சரத் உறவினர்களிடம் பிரேத பரிசோதனையை முடித்து தர எஸ்ஐ சேகர் பணம் கேட்டுள்ளார். மேலும் ரூ.5 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கூடுதலாக எஸ்ஐ

பணம் கேட்டாராம். அதற்கு பணம் வராத நிலையில் பிரேத பரிசோதனைக்கான காவல்துறை ஆவணங்களை சமர்ப்பிப்பதில் எஸ்ஐ சேகர் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. சரத் உறவினர்கள் மூலம் இது பற்றிய விவரங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியவர திருச்சி எஸ்பி உத்தரவின்பேரில் எஸ்ஐ சேகர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.