திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை!

0 410
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிக்ச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் கோணக்கரை பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் 03.08.2021 முதல் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று 7 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆணையர் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலரின் மேற்பார்வையில் கேர் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் ஆர், ஜெயகிருஷ்ணா மூலம் இப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Leave A Reply

Your email address will not be published.