முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது திருச்சி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து!

0 232
Stalin trichy visit

முன்னாள் முதல்வர் கருணாதியால் முக்கொம்பு கதவணை கட்டப்பட்டது. அதற்கு முன்னால் காவிரி, கொள்ளிடத்தை இரண்டாக பிரிக்க கொள்ளிடம் கதவணை கட்டப்பட் டது. வெள்ளக்காலங்களில் திருச்சி நகருக்குள் வெள்ள நீர் புகாதவாறு தடுக்க இந்த கதவணை கட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2018ல் அதிமுக ஆட்சி காலத்தில் முக்கொம்பு – கொள்ளிட கதவணையில் 9 தடுப்புகள் சரிந்து இடிந்து விழுந்தது. இதையடுத்து 2018 செப்டம்பர் 3ம் தேதி திமுக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடிந்த கதவணையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முக்கொம்பு-மேலணையில் கொள்ளிட கதவணை உடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையற்ற ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டி பேசினார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் மீது திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் ஆஜரானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜ ரானார். விசாரணை நடத்திய நீதிபதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.