திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநில சிறுவர்கள் மீட்பு!

0 235
Stalin trichy visit

திருச்சி ரயில் நிலைய 5வது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும் வகையில் 3 சிறுவர்கள் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீசார், 5வது பிளாட்பாரத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த 14 முதல் 16 வயதுக் குள்ளான 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் உத்தரபிரதேசம், சத்தீஷ்கர், பீகாரை சேர்ந்த சிறுவர்கள் என்பதும், வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 சிறுவர்களையும் மீட்டு திருச்சி ரயில்வே காப்பகத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து 3 சிறுவர்களை வேலைக்கு அழைத்து வந்தது யார்?, எதற்காக ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.