செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!
திருச்சி அருகே மேலகல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் அந்த பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்குகிறது. இதன் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 14ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அனுக்கை, விக்னேஸ்வர பூஜை
புனஸ்காரங்கள் உடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. 15ம் தேதி 2, 3ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 4 கால யாகசாலை பூஜை நடந்து பின்னர் விமான கோபுர கும்பாபிஷேகமும் அதன்பிறகு மூலவருக்கு கும்பாபிசேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை குணசீல சர்மா மற்றும் குழுவைச் சேர்ந்த
சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். கோபுர சுதை வேலைகள் நாகசுந்தரம் சபதி செய்திருந்தார். விழாவில் மேலகல்கண்டார்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.