போலீசாருக்கு கல்லீரல் நோய் தொடர்பாக விளக்கம்!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஏற்பாட்டின்படி காவலர்களின் நல்வாழ்விற்காக திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கல்லீரல் நோய்கள் தொடர்பான விளக்கம், தடுப்பு நடவடிக்கைகள்

மற்றும் அறிவுரைகள் தொடர்பாக global health city- பெரும்பாக்கம் சென்னை மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவர் ஜாய்வர்கீஸால் இன்று வழங்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.