திருவெறும்பூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் யோகேஸ்வரன்(வயது 23). இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஒரு பெண்ணை விரும்பியதாகவும், அந்தப் பெண் காதலித்துவிட்டு
யோகேஷ்வரனை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட யோகேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து அசோக்குமார் திருவெறும்பூர் காவல்
நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யோகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.