ஸ்ரீரங்கத்தில் நாளை இசை நிகழ்ச்சி!
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் இணைந்து ‘பாரதத்தில் பாரதி’ எனும் தலைப்பில் டாக்டர் காஷ்யப் மகேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு சிருங்கேரி
வித்யாபாரதி பவனம் திருமண மண்டபத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கவுள்ள இந்நிகழ்ச்சி பாரதியாருக்கு ஒரு இசை அஞ்சலியாக அமையும். முழுவதும் பாரதியாரின் பாடல்களை மட்டுமே கொண்ட இதில் தேசியம், தெய்வீகம், ஞானம், சமத்துவம் உள்ளிட்ட அவரது பன்முக உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற
பிரபலமான பாடல்களோடு அரிய பாடல்களும் இடம்பெறும். நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ஆனந்த் வயலினும், உத்தமர்கோவில் ஹரிபிரசாத் மிருதங்கமும், ஸ்ரீரங்கம் ஹரிகிஷோர் கஞ்சிராவும் இசைக்கின்றனர்.