வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் கவுன்சிலர் செந்தில்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி வழக்கறிஞரும், கவுன்சிலருமான ந.செந்தில் தனது 43-வது வார்டுக்குட்பட்ட பன்னீர்செல்வம் தெருவில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறிய கல்வெட்டு பாலம் அமைக்கும் பணியை இன்று அப்பகுதி மக்கள் முன்னிலையில்

தொடங்கி நிறைவேற்றினார். இதேபோல் பரமஹம்சர் துவக்கப்பள்ளியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் தண்ணீர் வராமல் இருந்ததை இன்று சரி செய்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்து கொடுத்தார். இதற்கு ஆசிரியர்கள், கவுன்சிலர் செந்திலை வெகுவாக பாராட்டினர்.