திருவிழாவையொட்டி ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலில் எஸ் பி சுஜித்குமார் ஆய்வு!

0 347
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் திருவிழா வருகிற 29ம் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார

பகுதிகளில் கோவிலுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்தார். அப்போது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன் மற்றும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.