திருச்சி எ.புதூர் நல்லதண்ணிகேணி தெருவை சேர்ந்தவர் நாராயணன்(வயது 63), மர ஆசாரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டின் மேற்கூரையான ஓட்டு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள நாராயணனுக்கு தகவல்
தெரிவித்தனர். இதையத்து நேற்றிரவு வீடு திரும்பிய நாராயணன், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கலைந்து சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் பணம் நகைகள் திருடு போகவில்லை. இதில் முன்னெச்சரிக்கையாக பீரோ லாக்கரில் நகைகளை வைத்ததால் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த எ.புதூர் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.