சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 22). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் விடுதியின் அறையின் கதவு
திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதியின் ஊழியர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரேம்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இது
குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமார் எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.