வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை!

0 286
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி சேர்ந்த சண்முகம். இவரது மனைவி ராணி(வயது 50). இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து

 

வீட்டிற்குள் அரிசி பாத்திரத்தில் வைத்திருந்த ரூ. 45 ஆயிரம் மற்றும் 6 சவரன் தங்க நகையினை மர்மநபர் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணி இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர்

போலீசார் வழக்கு பதிந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.