மாணவ, மாணவிகள் ரத்ததானம்!
திருச்சி தேசியக் கல்லூரியின் லியோ சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் லியோ சங்க ஆசிரிய ஆலோசகர் நீலகண்டன்வரவேற்றார். முதல்வர் சுந்தரராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினரான திருச்சி ராக்கிட்டி ஷைன் லையன் சங்க தலைவர் லயன் தீபக் ராஜா கலந்து கொண்டார். முடிவில் லியோ சங்க மாணவ
பொருளாளர் இலக்கியா நன்றி கூறினார். இவ்விழாவில் லயன் ஜாய்ஸ் ராய், லயன்லெட்சுமணன், லயன்தியாகராஜன், லயன்சிவ குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி செயலாளர் ரகுநாதன்,
நீலகண்டன் ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டினார்.