திருச்சி வடக்கு தாரநல்லூரை சேர்ந்தவர் சிவச்சந்திரன் ( வயது 36). சம்பவத்தன்று இவர் திருச்சி. காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மெயின்கார்டு கேட் பகுதிக்கு சென்றார். அப்பொழுது தெப்பகுளம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது இவரது அருகில் நின்று கொண்டிருந்த 2 மர்ம ஆசாமிகள் சிவச்சந்திரன் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 525 பணத்தை திருடிக்கொண்டு ஓட முயன்றனர். அவர்களை
அருகில் இருந்தவர்கள் பிடித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவச் சந்திரன் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிய
எடமலைப்பட்டி புதூர் ராமசந்திர நகரை சேர்ந்த மகேந்தி ரன் (வயது 22), பாலக்கரையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.