திருச்சி மாநகராட்சியில் தி.மு.க உறுப்பினர்கள் 5 பேர் வார்டுக்குழு தலைவர்களாக தேர்வு

0 560
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 20. திருச்சி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான தலைவர் தேர்தல் நடைபெற்றத்தில் போட்டின்றி ஒருமனதாக வார்டுக்குழுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 1வது வார்டுக்குழுக்கு தலைவராக திருமதி ஆண்டாள் ராம்குமாரும், 2வது வார்டுக்குழு தலைவராக பி.ஜெயநிர்மலாவும், 3வது வார்டுக்குழு தலைவராக மு.மதிவாணன், 4வது வார்டுக்குழு தலைவராக த.துர்காதேவி, 5வது வார்டுக்குழு தலைவராக விஜயலெட்சுமி கண்ணன் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வார்டுக்குழு உறுப்பினர்களுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் முஜிபுர்ரகுமான் சான்றிதழ் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.