“தாய், அக்காள், 1 வயது மகனுக்கு அரிவாள் வெட்டு” தலைமறைவானவருக்கு வலைவீச்சு!

0 395
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல்டைசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் தனலட்சுமிக்கும், மைக்கேல்டைசனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனலட்சுமி தனது தாயின் மாடி வீட்டின் கீழ் பகுதியில் தனது 1 வயது மகனுடன் வசித்து வருகிறார். அவரது தம்பி தனகோடி(வயது 22) மாடி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனகோடி,

தனலெட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகன் தாக்தேவ் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உயிருக்கு போராடிய தனலட்சுமி மற்றும் தாயை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்துள்ளனர். தகவலறிந்த துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.