மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு; வருவாய்த்துறையினர் விசாரணை!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா ஆரியக்கோன்பட்டியை அடுத்த சோளக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(வயது 49). விவசாயி. இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். வீடு அருகே பட்டி அமைத்து அதில் மொத்தம் 60 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று
முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை பார்த்தபோது பட்டியில் இருந்த 12 ஆடுகள் கழுத்து பகுதியில் கடிபட்ட காயத்துடன் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விலங்குகள் கடித்து ஆடுகள் செத்ததாக கூறப்படுகிறது.