சாலையோர உணவு வணிகர்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு கூட்டம்!

0 376
Stalin trichy visit

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உணவு பொருள் சார்ந்த கடைகளை இயக்கி வரும் வியாபாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது – மேலும் சாலையோர கடைகளை நடத்தி வரும் விபாயாரிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டதோடு,விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் அளிக்கப்பட்டது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.