விரும்பியவரை திருமணம் செய்ய பெற்றோர் ஒத்துக்காததால் இளம்பெண் தற்கொலை!

0 271
Stalin trichy visit

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கீர்த்தனா(வயது 21). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து உடனே பொன்மலை

போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியதும், அதற்கு பெற்றோர் சம்ம திக்கவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.