தொமுச தேர்தலை நிறுத்த சதி திட்டம்? போஸ்டரால் பரபரப்பு!

0 556
Stalin trichy visit

பெல் தொழிற்சாலை சார்ந்த தொமுச எனப்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் 1,900 உறுப்பினர்கள் உள்ளனர். பெல் தொழிற்சாலையின் முதன்மை பங்குபெறும் இந்த தொழிற் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதன்படி 2018 டிசம்பரில் நடந்த தேர்தலில் பொதுச் செயலாளராக தீபன், துணை பொதுச் செயலாளராக பரமேஸ்வரன் உட்பட பலர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் 5 ஓட்டில் கணேஷ்குமார் தோல்வியடைந்தார். இந்நிலையில், இப்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பதை கடந்து, நான்கரை ஆண்டுகளானதால் தொமுச தேர்தல் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலை நடத்த வேண்டுமென்று தீபன்ஆரம்பத்தில் இருந்தே

முனைப்பு காட்டியதால் அவருடன் இருந்த பரமேஸ்வரன் அணி உள்ளிட்ட பலர் அதற்கான பணியில் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று தேர்தல் நடத்துவதில் பின்வாங்கிய தீபன் உடனிருந்த பரமேஸ்வரன் அணியைச் சேர்ந்த 600 பேர் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த கணேஷ்குமார் அணியுடன் கைகோர்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டநிலையில் தேர்தலை நிறுத்தி காலம் கடத்த, தீபன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலிற்கான அறிவிப்பை வெளியிட நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தைச் சார்ந்த தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி பாரி

ஆணையராக வந்தார். அவரிடம் பல்வேறு காரணங்களை கூறிஅவரை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் விரும்பிகள், திருச்சி பெல் தொமுசவிற்கு விடியல் எப்போது? தனி நபர் பதவி வெறியா? ஒன்றுபட்ட தொமுசவா? தலைவரின் வழியில் விடியலா? தேர்தல் அறிவிப்பு வெளியிட வந்த கமிஷனரை வழிமறித்து திருப்பி அனுப்பிய தன் மர்மம் என்ன? இப்படிக்கு, தொமுச உடன்பிறப்புக்கள் என்று போஸ்டர் யுத்தத்தை திருவெறும்பூரில் நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.