திருச்சி டிஐஜி தடாலடி…
திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் தயாரிப்பவர்கள் மற்றும் வெளிமாநில மதுபானங்களை கடத்துதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


திருவெறும்பூரில் உள்ள மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்தை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று ஆய்வு செய்தார். அப்போது மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு, சட்ட பிரிவு 110 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தொடர் குற்றங்களை ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போலி மதுபாணங்களை தயாரித்தல், வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி தமிழகத்தில் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவெறும்பூர் பகுதியில் உள்ள நலிந்த குடும்பங்களை சேர்ந்த 5 பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்
அப்பொழுது மதுவிலக்கு பிரிவு திருச்சி டிஎஸ்பி முத்தரசு திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் உடன் இருந்தனர்.